யானை கூட்டத்தால் மா மரங்கள் சேதம்
யானை கூட்டத்தால் மா மரங்கள் சேதம்
யானை கூட்டத்தால் மா மரங்கள் சேதம்
ADDED : மே 16, 2025 01:19 AM
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, ஜார்க்கலட்டி மற்றும் தடிக்கல் பகுதியில், 10க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித்திரிகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி நேற்று முன்தினம் இரவு கிராமங்களை நோக்கி படையெடுத்த யானைகள் கூட்டம், விவசாயிகள் மாதேசன், சின்னபையன், பரமசிவம், ஜெயவேல், முருகேசன் ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்து, 200க்கும் மேற்பட்ட மா மரங்களின் கிளைகளை உடைத்து சேதப்படுத்தின.
தற்போது மாம்பழ சீசன் என்பதால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்றது. அதேபோல், தக்காளி, வாழை, நெல், பீன்ஸ் தோட்டங்களிலும் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.