/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மருத்துவ முகாம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மருத்துவ முகாம்
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மருத்துவ முகாம்
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மருத்துவ முகாம்
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மருத்துவ முகாம்
ADDED : செப் 26, 2025 01:33 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் மூலம், சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கல்லுாரி கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். இயற்பியல் விரிவுரையாளர் கண்ணதாசன் வரவேற்றார். சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஸ்ரீபால், சரண்யா மற்றும் செல்வி, உள்ளிட்ட மருத்துவ குழுவினர்கள், மாணவ, மாணவியருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கினர்.
முகாமில் கல்லுாரியின் அனைத்து துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆங்கில விரிவுரையாளர் சக்திவேல் மற்றும் வேதியியல் விரிவுரையாளர் லோகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில், 550 மாணவர்கள் பயனடைந்தனர். ஆங்கில பேராசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.