/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 40 யானைகளை விரட்டும் பணி தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 40 யானைகளை விரட்டும் பணி
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 40 யானைகளை விரட்டும் பணி
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 40 யானைகளை விரட்டும் பணி
தேன்கனிக்கோட்டை வனத்திற்கு 40 யானைகளை விரட்டும் பணி
ADDED : டிச 05, 2025 11:14 AM

ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்ட, 40 யானை-களை, தேன்கனிக்கோட்டையின் அடர்ந்த வனப்-பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா பகுதியிலி-ருந்து வெளியேறிய, 100க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரி, தேன்கனிக்கோட்டா, ராயக்கோட்டை, ஓசூர் வனச்சரகங்களில் குழுக்-களாக பிரிந்து அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் புகுந்த, 40 யானைகள், இரவில் வனத்தை விட்டு வெளி-யேறி, பயிர்களை நாசம் செய்தன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்-டனர். அதன்படி, சானமாவு வனப்பகுதியில் இருந்த யானைகளை கெலமங்கலம், உத்தனப்பள்ளி சாலை மற்றும் ஜக்கேரி, ராயக்கோட்டை சாலையை கடக்க வைத்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி, வனத்துறையினர் விரட்-டினர். மேலும் அவற்றை அடர்ந்த வனப்பகு-திக்குள் விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இக்கூட்டத்திலிருந்து பிரிந்து, நொகனுார் வனத்தில் சுற்றித்திரியும் ஒற்றை யானையை, வனத்துறையினர் கண்கா-ணித்து வருகின்றனர்.


