Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து தாய், மகள் படுகொலை

கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து தாய், மகள் படுகொலை

கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து தாய், மகள் படுகொலை

கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து தாய், மகள் படுகொலை

ADDED : செப் 27, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் தாய், மகள் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர், யாசின் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 55; கட்டட மேஸ்திரி. பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். 2018ல் உடல் நலக்குறை வால் சுரேஷ் இறந்த பின், அவரது மனைவி எல்லம்மாள், 50, வட்டி தொழிலை கவனித்தார்.

இவர்களுக்கு பெரியசாமி, 16, என்ற மகன், சுசிதா, சுசிகா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். மூவரும் ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்தனர். இதில், சுசிகா 2018ல் விபத்தில் இறந்து விட்டார்.

சுசிதா தற்போது ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

காலாண்டு தேர்வு முடிந்து நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். மாலை, 5:00 மணியளவில் எல்லம்மாளின் உறவினர் சரோஜா, கால்நடைகளுக்கு புல் அறுக்க எல்லம்மாளை அழைத்துள்ளார்.

அப்போது வீட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, ஷோபாவில் எல்லம்மாள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.

தரையில் சுசிதாவும் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த சரோஜா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, டி.எஸ்.பி., முரளி சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் சோதனை நடந்தது.

எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது:

கண்காணிப்பு கேமரா காட்சிகள், தடயங்களை சேகரித்துள்ளோம். இறந்தவரின் மொபைல் போன் மற்றும் அவரிடம் பேசியவர்கள் என அனைத்தையும் விசாரித்து வருகிறோம். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us