/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவக்கம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவக்கம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவக்கம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவக்கம்
ADDED : செப் 25, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கதிரியக்க பிரிவில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, காந்திசாலையில் உள்ள பழைய தலைமை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயங்கி வந்தது. கடந்த மாதத்தில், அந்த இயந்திரத்தை எடுத்து, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றினர். இயந்திரம் நிறுவும் பணி முடிந்து, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சேவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் சத்யபாமா குத்துவிளக்கேற்றி, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை துவக்கி வைத்து பேசியதாவது: இந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம், 1.5 டெஸ்ட்லா திறன் கொண்டது. இதன்மூலம், மூளை, தண்டுவடம், நரம்பு மண்டலம், மூட்டு மற்றும் உடலில் அனைத்து உறுப்புகளையும் மிக துல்லியமாக கணிக்கவும், நோய் குறியீடு குறித்து அறியவும் முடியும். இங்கு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அரசின் குறைந்த கட்டணமாக, 2,500 ரூபாயில் எடுத்துக் கொள்ளலாம்.
ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக எடுக்கப்படுகிறது. இந்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் புதிய தொழில்நுட்பத்துடன் செயல்படுவதால், பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் சுபேதா, குடியிருப்பு மருத்துவர் செல்வராஜ், மருத்துவர் தினேஷ், கதிரியக்க பிரிவு துறைத்தலைவர் மருத்துவர் அருண்திலீப் உள்பட பலர் பங்கேற்றனர்.