/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 1.5 லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம் 1.5 லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
1.5 லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
1.5 லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
1.5 லட்சம் மரக்கன்று நடும் பணி துவக்கம்
ADDED : செப் 25, 2025 01:49 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளியில், பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2022- 2025ம் ஆண்டு வரை பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தில், 2,105.80 ஹெக்டேர் பரப்பளவில் 5,04,630 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
2025--26-ம் ஆண்டில், 300 ஹெக்டேர் பரப்பளவில், 1,50,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. தற்போது திப்பனப்பள்ளியில், 3 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில், 1,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, பி.டி.ஓ.,க்கள் முகம்மது சிராஜூதின், வனச்சரக அலுவலர்கள் மூர்த்தி, சிவா, செந்தில்குமார், குமார், வனவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.