ADDED : டிச 15, 2024 01:08 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை, டிச. 15-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஆட்டுக்காரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் மகன் தருண், 17. இவர், தனது வீட்டில் இருந்து, அரூர் அருகே உள்ள ராமியம்பட்டி கிராமத்தில் உள்ள, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 12ல், காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் உஷா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதன்படி, ஊத்தகங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


