ADDED : மே 16, 2025 01:23 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை ஒரே நாளில், 257 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது. அதிகபட்சமாக ஓசூரில், 39 மி.மீ., மழை பதி
வானது. மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்தே அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெயில் வாட்டி எடுத்தாலும், மக்கள் ஓரளவிற்கு வெப்பத்தில் இருந்து தப்பி வருகின்றனர். கோடை மழை கை கொடுத்து வருவதால், மானாவாரி சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.