/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மேம்பால பணிக்கு கருத்து கேட்பு ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மேம்பால பணிக்கு கருத்து கேட்பு
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மேம்பால பணிக்கு கருத்து கேட்பு
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மேம்பால பணிக்கு கருத்து கேட்பு
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன் மேம்பால பணிக்கு கருத்து கேட்பு
ADDED : செப் 24, 2025 01:23 AM
ஓசூர் : ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில் கட்டப்படுகிறது. இங்கு பஸ்கள் வந்து செல்ல ஏதுவாக, 37.93 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்க உள்ளன.
பத்தலப்பள்ளி பகுதியில் சிப்காட் - 2 அமைந்துள்ளது. ஒரு ஷிப்டிற்கு, 14,000 பேருக்கு மேல் வேலை செய்கின்றனர். இதில் பெண்களும் அடங்குவர். இதுதவிர கல்வி நிறுவனங்கள், ஹட்கோ ஸ்டேஷன், பத்தலப்பள்ளி மார்க்கெட் போன்றவை உள்ளதால், இப்பகுதியில் ஏற்கனவே சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேம்பால பணிகள் துவங்கும்போது, சர்வீஸ் சாலையில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்படும் என்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேம்பாலம் அமைப்பது குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டம், பத்தலப்பள்ளியில் உள்ள போர்ட் கூட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பாலம் அமைய உள்ள இடத்தில், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், ஓசூர் தொழில் நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள், தொழில்முனைவோர், தன்னார்வலர்கள் என பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பயணிகளுக்கான பஸ் ஸ்டாப் வசதி செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், கடைசியில் பேசிய, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், 'பாதிப்பு ஏற்பட தான் செய்யும். மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார். இதனால், கூட்டத்திற்கு வந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.