/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கடனை கேட்டு தொழிலாளியை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு' கடனை கேட்டு தொழிலாளியை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
கடனை கேட்டு தொழிலாளியை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
கடனை கேட்டு தொழிலாளியை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
கடனை கேட்டு தொழிலாளியை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 02, 2025 03:32 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பைபாஸ் சாலையை சேர்ந்தவர் மகபூப் பாஷா, 34. ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த ஓராண்டிற்கு முன், தனியார் பைனான்சில் இருந்து, 70,000 ரூபாய் கடன் வாங்கி, தினமும் தவணை தொகையாக, 700 ரூபாய் செலுத்தி வந்தார். கடந்த, 29ம் தேதி இரவு, 9:45 மணிக்கு அவரிடமிருந்து தவணை தொகையை வாங்க, பைனான்ஸ் ஊழியரான, கலகோபசந்திரத்தை சேர்ந்த முரளி, 28, என்பவர் வந்தார். அவரிடம், 500 ரூபாயை மட்டுமே மகபூப் பாஷா கொடுத்ததால் அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்-டது.
ஆத்திரமடைந்த முரளி, தன் நண்பர்களான கலகோபசந்திரத்தை சேர்ந்த தேவராஜ், 20, லோகேஷ், 22, பென்சுப்பள்ளியை சேர்ந்த கிரிஸ்ரெட்டி, 22, ஆகியோருடன் சேர்ந்து, மகபூப் பாஷாவை கையால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், புகார் படி, முரளி, தேவராஜ், லோகேஷ், கிரிஸ்ரெட்டி ஆகிய, 4 பேரை நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.