Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்: பயன்பெற அழைப்பு

நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்: பயன்பெற அழைப்பு

நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்: பயன்பெற அழைப்பு

நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்: பயன்பெற அழைப்பு

ADDED : ஜூன் 20, 2025 12:53 AM


Google News
கிருஷ்ணகிரி, விவசாயிகள், கார், குறுவை, சொர்ணவாரி நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில், நெல் சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், விவசாயிகளுக்கு, நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற நெல் விதைகள், உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்ட சத்துக்

கலவை ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் இயந்திர நடவு முறையில் நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

இதில் பயன்பெற, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்களை, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு

செய்து கொள்ளலாம்.

அதே போல, தரமான சான்று பெற்ற நெல் விதைகள், உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்ட சத்துக்கலவை ஆகிய இடுபொருட்களை, 50 சதவீத மானியத்தில் பெறலாம்.

நெல் சாகுபடியில், நாற்று நடவு முறையை இயந்திரமயமாக்குவதால், நடவு நேரம், சாகுபடி செலவு குறைந்து, விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். சான்று பெற்ற விதை நெல்லை பயன்படுத்துவதால் உணவு உற்பத்தி அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.+





      Our Apps Available On




      Dinamalar

      Follow us