ADDED : ஜூன் 04, 2025 01:13 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை அருகே, கிரியனப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. 65 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் மிகவும் சேதமாகி இருப்பதால், தனியார் கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.
பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என, பெற்றோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், நேற்று முன்தினம் குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.அதேபோல் நேற்று, 2வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு பெற்றோர் அனுப்பாமல் புறக்கணித்தனர்.