Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 24, 2024 11:05 AM


Google News
கிருஷ்ணகிரி: விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணு தலைமை வகித்தார். சி.பி.ஐ., மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் மோகன் உள்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும். கருணாநிதி வழங்கிய விவசாய தொழிலாளர் நலவாரியத்தை, உடனே அமைக்க வேண்டும். வீடற்ற விவசாய தொழிலாளர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும், உடனே பட்டா வழங்க வேண்டும். 60 வயது முடிந்த அனைவருக்கும், மாதந்தோறும் ஓய்வூதியம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில், நாகோஜனஅள்ளி பேரூராட்சியில், நிறுத்தி வைத்துள்ள, 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us