/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கோரிக்கைஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கோரிக்கை
ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கோரிக்கை
ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கோரிக்கை
ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கோரிக்கை
ADDED : செப் 24, 2025 01:54 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி முடிவின் படி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாநில தலைவர் வெங்கடேசன், ஆசிரியர் தகுதி தேர்வு சம்பந்தமாக உச்ச நீதிமன்ற ஆணையை மறுபரிசீலனை செய்ய வேண்டி, பிரதமருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரை அஞ்சலகத்தின் மூலமாக தபால் அனுப்பிய நிகழ்வில், வட்டார தலைவர் மூர்த்தி, வட்டார செயலாளர் செந்தில்குமார், வட்டார பொருளாளர் தங்கராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அருண், ஆனந்தகுமார், வெங்கடேசன், குமரவேல், பிரபு, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.