Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அயோத்தியில் கும்பாபிஷேகத்தையொட்டி கிருஷ்ணகிரி கோவில்களில் திருவிளக்கு பூஜை

அயோத்தியில் கும்பாபிஷேகத்தையொட்டி கிருஷ்ணகிரி கோவில்களில் திருவிளக்கு பூஜை

அயோத்தியில் கும்பாபிஷேகத்தையொட்டி கிருஷ்ணகிரி கோவில்களில் திருவிளக்கு பூஜை

அயோத்தியில் கும்பாபிஷேகத்தையொட்டி கிருஷ்ணகிரி கோவில்களில் திருவிளக்கு பூஜை

ADDED : ஜன 21, 2024 12:20 PM


Google News
கிருஷ்ணகிரி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரியில் பல்வேறு கோவில்களில் பூஜை, அன்னதான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (22ம் தேதி) நடக்கிறது. பிரதமர் மோடி, பகல் 12:20 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இதில், நாடு முழுவதிலிமிருந்து ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கிருஷ்ணகிரியிலும் பல்வேறு கோவில்களில் அன்னதானம், மாவிளக்கு பூஜை நடக்கவுள்ளன. பழையபேட்டை அங்காளம்மன் கோவில், 108 விளக்கு பூஜை நடக்கிறது. சன்னதி நவநீத வேணுகோபால சுவாமி, ராசுவீதி சந்திரமவுலீஸ்வரர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பக்த ஆஞ்சநேயர் கோவில், பழையபேட்டை சோமேஸ்வர் கோவில், நரசிம்ம சுவாமி கோவில் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் ராம நாம நிகழச்சி, சிறப்பு பூஜை, மற்றும் அன்னதானம் நடக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தில் கிருஷ்ணகிரியில் இந்த கோவில்களில், ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us