/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு
சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு
சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு
சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு
ADDED : அக் 12, 2025 02:53 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப்-புற கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு, 41 மி.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலையில் உள்ள இருதுக்கோட்டை பகுதியில், 40 ஆண்-டுகள் பழமையான நாகமரம், கனமழைக்கு வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், நெமிலேரி, உனிசெட்டி, அய்யூர், கொடகரை, பெட்ட-முகிலாளம், தொழுவபெட்டா உட்பட, 20 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மரம் விழுந்ததில் மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்தன. அதனால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை தேன்கனிக்கோட்டை வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியத்தினர் ஒன்றிணைந்து, சாலையில் இருந்த மரத்தை அகற்றினர். மேலும், மின்சார கம்பிகளை மாற்றி, மின்-சாரம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டது.


