/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்மா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
மா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
மா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
மா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 07, 2024 12:23 AM
கிருஷ்ணகிரி : பக்கத்து மாநிலங்களைப்போல், மா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மா உற்பத்தியில் முதன்மை வகிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 2 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்மை மற்றும் மா மரங்களில் நோய் தாக்குதல் காரணமாக கடந்த, 4 ஆண்டுகளாக மா விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தாண்டு வீசிய கடும் வெப்பத்தால், 75 சதவீதம் மா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மீதமுள்ள, 25 சதவீதம் உள்ள மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மா விவசாயிகள் கூறியதாவது:பக்கத்து மாநிலங்களில் மா விவசாயிகளுக்கு என சிறப்பு திட்டமாக கிலோ ஒன்றுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. அதே போல், தமிழக மா விவசாயிகளுக்கும் சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மா மரங்களில் பூக்கள் பூக்கத்துவங்கியவுடன், முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி, மாவிற்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்கும் விலை மா விவசாயிகளுக்கு சென்று சேருகிறதா என மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், மாங்கனி நகரம் என்ற பெயரை இழப்பதோடு, இத்தொழிலை நம்பியுள்ள, 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.இவ்வாறு கூறினர்.