/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 03, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி,
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த, 2 நாட்களுக்கு முன் பெய்த மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 438 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 566 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து கடந்த, 3 நாட்களாக தலா, 426 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 51 அடியாக இருந்தது.
பாரூர் பெரிய ஏரியின் மொத்த கொள்ளளவான, 15.60 அடிக்கு தண்ணீர் இருப்பதால், ஏரிக்கு வந்து கொண்டிருக்கும், 86 கன அடி தண்ணீர், மதகு மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை பாம்பாறு அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 11.40 அடியாக நீர்மட்டம் இருந்தது. சூளகிரி சின்னாறு அணை மொத்த உயரமான, 32.80 அடியில், 8.96 அடியாக நீர்மட்டம் இருந்தது. இரு அணைகளுக்கும் நீர்வரத்தும், நீர்திறப்பும் இல்லை. மழையின்றி, கிருஷ்ணகிரியில் கடந்த, 2 நாட்களாக மீண்டும் வெயில் பொதுமக்களை வாட்டி வருகிறது.