/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி
கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி
கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி
கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 02, 2025 03:31 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், கட்சி நிர்-வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். ஓசூர் மாநகராட்சி, 4 பகுதிகளில் உள்ள, 45 வார்டுகள், ஒன்றி-யத்தில் உள்ள, 179 பஞ்.,க்கள், தேன்கனிக்கோட்டை, கெலமங்-கலம் டவுன் பஞ்.,க்களில் உள்ள, 33 வார்டுகள் உட்பட மொத்தம், 662 இடங்களில், இனிப்பு, நலத்திட்ட உதவி, அன்ன-தானம், பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், மரக்கன்று நடுதல், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கருணா-நிதி பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டும். அதேபோல், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி துண்டு பிர-சுரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.