ADDED : ஜூன் 24, 2024 04:28 AM
மேலுார் : அரிட்டாபட்டியில் இளமநாயகி அம்மன் ஜல்லிக்கட்டு காளை நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.இதில் கலந்து கொண்ட காளைகளை 15 அணிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
அடக்க முடியாத காளைகளுக்கான பரிசை உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய மாடு பிடிவீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். கல்லம்பட்டி, சூரக்குண்டு தெற்குத்தெரு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.