/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவமனைகளுக்கான ‛'அபிகான்' மாநாடு மருத்துவமனைகளுக்கான ‛'அபிகான்' மாநாடு
மருத்துவமனைகளுக்கான ‛'அபிகான்' மாநாடு
மருத்துவமனைகளுக்கான ‛'அபிகான்' மாநாடு
மருத்துவமனைகளுக்கான ‛'அபிகான்' மாநாடு
ADDED : ஜூன் 16, 2024 05:10 AM
மதுரை: மருத்துவமனைகளின் நிலைப்புத்தன்மையை மேம்படுத்தும் வகையில் மதுரையில் முதன்முறையாக இந்திய சுகாதார பராமரிப்பு வழங்குநர்கள் சங்கத்தின் மாநில அளவிலான 'அபிகான்' மாநாடு நடந்தது.
சிம்ஸ் மருத்துவமனை துணைத்தலைவர் ராஜூ சிவசாமி வரவேற்றார். அபிகான் நிறுவனர் டாக்டர் அலெக்ஸாண்டர் தாமஸ் பேசுகையில், ''இந்நாட்டில் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை உற்பத்தி செய்யும் ஐந்தாவது துறையாக சுகாதார பராமரிப்புத் துறை உள்ளது.
சுற்றுச்சூழல் மீதான செயல்பாடுகளின் எதிர்மறை தாக்கத்தை குறைப்பதற்கு பருவநிலைக்கு உகந்த சுகாதார பராமரிப்பு சாதனங்களையும், திட்டங்களையும் வேகமாக நிறுவி செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம்” என்றார்.
தலைமை இயக்குநர் டாக்டர் கிரிதர் கியானி பேசுகையில்,இந்திய சுகாதார சேவையில் தனியார் துறையின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகம்'' என்றார். மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனை துணைத்தலைவர் டாக்டர் சதீஷ் தேவதாஸ் பேசுகையில், ''மின்சக்திக்கான கட்டண செலவுகளை குறைப்பதோடு மருத்துவமனை நிறுவுவதற்கான நிலத்தை வாங்கவும் நிதியுதவியை பெறவும் தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்'' என்றார். ஆல்பா கேர் மருத்துவமனை நிறுவனர் அடெல் நன்றி கூறினார்.
தரமான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கிய 15 மருத்துவமனைகளுக்கு 'அபிகான்' விருதுகள் வழங்கப்பட்டன. ரேலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலாவிற்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.