Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/  கல்வி சர்வதேச பள்ளிக்கு  அங்கீகாரம்

 கல்வி சர்வதேச பள்ளிக்கு  அங்கீகாரம்

 கல்வி சர்வதேச பள்ளிக்கு  அங்கீகாரம்

 கல்வி சர்வதேச பள்ளிக்கு  அங்கீகாரம்

ADDED : ஜூன் 16, 2024 05:09 AM


Google News
மதுரை: சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப் பள்ளி 2024 ல் உலகின் மிகச் சிறந்த 10 பள்ளிகள் தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இது யுனைடெட் கிங்டம் (யு.கே.,), அக்சென்ச்சர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், லெமன் அறக்கட்டளையுடன் இணைந்து 'டி4' கல்வியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விருது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு, தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் கொண்ட நடுவர் அகாடமி, கடும் அளவுகோல்களின் அடிப்படையில் வெற்றியாளர்களை தேர்வு செய்கிறது.

கல்வி பொதுப் பள்ளி 2019 ல் துவக்கப்பட்டது. 2,359 உள்ளூர் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தியுள்ளது. சிறார் குற்றங்களை குறைக்க, சமூக ஈடுபாட்டை வளர்க்க பங்களிப்பு வழங்குகிறது. 15 மாணவர்கள் தேசிய அளவில் வெற்றியாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

பின்தங்கிய குழந்தைகளுக்கு தரமான கல்வி, விளையாட்டு பயிற்சி அளிக்கிறது. குடிசைப் பகுதிகளை சேர்ந்த 452 மாணவர்களுக்கு எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us