ADDED : ஜூலை 26, 2024 06:24 AM
மதுரை: மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர்கள் முனியாண்டி, கவிமணி வரவேற்றனர்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, போலீஸ் துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், முத்தமிழ்க் கழகம், ரோஜாவனம் டிரஸ்ட் ஆகியவை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு நிர்வாகி சோபனா பேசினர். செஞ்சிலுவை சங்க மேலுார் ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், அமைப்பாளர் சரவணன் நன்றி கூறினர். அறிவழகன் விழாவை ஒருங்கிணைத்தார். உறுப்பினர்கள் ராஜகோபால், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.