/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை கராத்தே வீரர் ஆசிய நடுவராக தேர்வுமதுரை கராத்தே வீரர் ஆசிய நடுவராக தேர்வு
மதுரை கராத்தே வீரர் ஆசிய நடுவராக தேர்வு
மதுரை கராத்தே வீரர் ஆசிய நடுவராக தேர்வு
மதுரை கராத்தே வீரர் ஆசிய நடுவராக தேர்வு
UPDATED : ஜூன் 13, 2024 05:44 PM
ADDED : ஜூன் 13, 2024 06:33 AM

மதுரை: மகாராஷ்டிரா புனேயில் நடந்த ஆசிய கராத்தே நடுவருக்கான கோஜூரியூ தேர்வில் வெற்றி பெற்ற மதுரை எப்.எப்.எப்., அகாடமி கராத்தே பள்ளிச் செயலாளர் பாரத், ஆசிய கோஜூரியூ நடுவராக தேர்வு செய்யப்பட்டார்.
புனேயில் உள்ள சத்ரபதி சிவாஜி விளையாட்டு வளாகத்தில் 8வது ஆசிய நாடுகளுக்கான கராத்தே போட்டி, ஆசிய நடுவருக்கான எழுத்து மற்றும் செயல்முறை தேர்வு நடந்தது.
உலக கோஜூரியூ கராத்தே சம்மேளனம் தலைவர் பீட்டர் ஹாம்ஸ், ஆசிய கோஜூரியூ கராத்தே சம்மேளன தலைவர் ஷிஹான் பல்ராம் மித்ரா, நடுவர் குழு செயலாளர் பார்த்திபன் மேற்பார்வையில் போட்டிகள் நடந்தன.
இந்தியா, பர்மா, பூடான், கஜகஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 35 தேசிய நடுவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த மதுரை எப்.எப்.எப்., அகாடமி கராத்தே பள்ளி செயலாளர் பாரத் ஆசிய நடுவராக தேர்ச்சி பெற்றார். தலைவர் ஷிஹான் பல்ராம் மித்ரா ஆசிய நடுவருக்கான சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு கோஜூரியோ கராத்தே சம்மேளன தலைவர் பார்த்திபன், செயலாளர் பிரமோஸ், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.