ADDED : ஜூன் 02, 2024 04:02 AM

மேலுார்: மேலுாரை சுற்றியுள்ள மேலவளவு, தும்பைபட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி இடி, மின்னலுடன் 45 நிமிடம் மழை பெய்தது.
இம்மழையில் கோட்டைப்பட்டி பகுதியில் பனைமரம் ரோட்டின் குறுக்கே விழுந்ததால் அரைமணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மக்கள் மரத்தை அகற்றியதால் போக்குவரத்து சீரானது. மேலும் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பல விவசாயிகளின் அறுவடைக்கு தயார்நிலை நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்தன. மாட்டு கொட்டகை ஒன்றின் மீது மரம் விழுந்ததால் சேதமானது. அதிர்ஷ்டவசமாக மாடு வெளியே ஓடியதால் உயிர் தப்பியது. இம்மழை சில விவசாயிகளுக்கு சாதகமாகவும், நெல் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் உள்ள விவசாயிகளுக்கு பாதகமாகவும் உள்ளது.