/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., மக்களுக்கான கட்சி அல்ல செல்லுார் ராஜூ சொல்கிறார் தி.மு.க., மக்களுக்கான கட்சி அல்ல செல்லுார் ராஜூ சொல்கிறார்
தி.மு.க., மக்களுக்கான கட்சி அல்ல செல்லுார் ராஜூ சொல்கிறார்
தி.மு.க., மக்களுக்கான கட்சி அல்ல செல்லுார் ராஜூ சொல்கிறார்
தி.மு.க., மக்களுக்கான கட்சி அல்ல செல்லுார் ராஜூ சொல்கிறார்
ADDED : ஜூலை 28, 2024 04:58 AM
மதுரை : ''தி.மு.க., மக்களுக்காக செயல்படும் கட்சி கிடையாது. அது பிரைவேட் கம்பெனி. அதன் மேனேஜர் ஸ்டாலின்'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
மதுரை பழங்காநத்தம் தெற்குத்தெருவில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை செல்லுார் ராஜூ திறந்து வைத்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மக்களை ஏமாற்றவே மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக தி.மு.க., போராட்டம் நடத்துகிறது. சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்காக 40 எம்.பி.,க்கள் குரல் கொடுத்தார்களா. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை என தி.மு.க., ஆர்ப்பாட்டம் செய்ததா. கச்சத்தீவு, காவிரியை மீட்டெடுத்திருக்கலாமே. மக்கள் பிரச்சனையை விட்டு விட்டு செங்கோலை பற்றி பேசுகிறார் மதுரை எம்.பி., வெங்கடேசன். எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ திட்டத்தைப் பற்றி பேசவில்லை.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க., ஆட்சியில் எத்தனை உயர்கல்வி நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னிலையில் இருந்தன. 3 ஆண்டுகளாக அம்மா உணவகத்திற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை. 2000 அம்மா மினி கிளினிக்கை முடக்கி விட்டனர்.
தி.மு.க., மக்களுக்கான கட்சி கிடையாது. அது பிரைவேட் கம்பெனி. அதன் மேனேஜராக ஸ்டாலின் உள்ளார். பின்னர் உதயநிதி, இன்பநிதியும் அந்த பதவிக்கு வருவார்கள் என்றார்.