Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கோழிப்பண்ணை அமைக்கணுமா

கோழிப்பண்ணை அமைக்கணுமா

கோழிப்பண்ணை அமைக்கணுமா

கோழிப்பண்ணை அமைக்கணுமா

ADDED : ஜூன் 25, 2024 06:13 AM


Google News
மதுரை : கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு குறைந்த பட்சம் 625 சதுரடி இடம் தேவை. 250 கோழிகள் அல்லது 100 நாட்டுக்கோழிகள் வளர்க்கலாம். குடியிருப்பிலிருந்து சற்று தள்ளியிருக்க வேண்டும். கொட்டகைக்கான கட்டுமான செலவு, தீவனத்தட்டு, தண்ணீர் வைக்கும் தட்டு, 4 மாதங்களுக்கு தேவையான தீவனச் செலவு ஆகியவற்றில் 50 சதவீதம் அதிகபட்சம் ரூ.ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 875 மானியம் பெறலாம். பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்.

விதவை, ஆதரவற்றோர், திருநங்கை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை. ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்தவருக்கு அனுமதியில்லை. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் கால்நடை பண்ணையில் இருந்து வாங்கி இலவசமாக வழங்கப்படும்.

கோழிப்பண்ணையை மூன்றாண்டுகளுக்கு குறையாமல் பராமரிக்க உத்தரவாத கடிதம் அளிக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி டாக்டரை அணுகலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us