/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்மையான பக்தி செய்தால் யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்: திருச்சி கல்யாணராமன் பேச்சு உண்மையான பக்தி செய்தால் யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
உண்மையான பக்தி செய்தால் யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
உண்மையான பக்தி செய்தால் யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
உண்மையான பக்தி செய்தால் யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
ADDED : ஜூன் 16, 2024 12:41 PM

மதுரை: உண்மையான பக்தி செய்தால் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க மாட்டார்கள் என ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
மதுரை தியாகராசர் கல்லூரியும் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பும் இணைந்து சிவத்திரு கருமுத்து கண்ணன் நினைவாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், 'இன்று போய் நாளை வா' என்ற தலைப்பில் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:
சரணாகதி என்ற ஒருவன் வந்துவிட்டால் அவனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ராமன் விபீஷணனை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் விபீஷணன் உணர்ந்து வந்தான். பகவானை உணர்ந்தால் மட்டும் போதாது அவன்தான் நடத்துகிறான் என்று முழு சரணாகதி சிந்தனை இருக்க வேண்டும்.
சரணாகதி, பரிசுத்தம் என்பதெல்லாம் இந்து மதத்தில் உள்ளது. எல்லோர் இதயத்திலும் பகவான் இருக்கிறார் என்பதை உணர்ந்து நல் எண்ணத்துடன் பக்தி சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும்.
நாம் எப்போதும் நல்லதையே சிந்திக்க வேண்டும். வேண்டாததை செய்தால் நம் வாழும் போதே கஷ்டம் வரும். நாம் உண்மையான தொண்டு செய்தால் பக்தி செய்தால் யாரும் நமக்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன் திருவடியை வணங்குவதை நான் விடமாட்டேன் என்கிறார் குலசேகர ஆழ்வார். இறைவனிடத்தில் நாம் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கக் கூடாது.
அவனாக கொடுக்க வேண்டும். குகனையும் விபீஷணனையும் தனது சகோதரனாக ஏற்றுக் கொண்டான். போரில் தோற்கும் நிலையில் இருந்த ராவணனை இன்று போய் போருக்கு நாளை வா என்று ராமன் சொன்னான். அது ஸ்ரீராமனின் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது. இவ்வாறு திருச்சி கல்யாணராமன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தியாகராசர் கல்லூரி செயலாளர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். சொற்பொழிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.