/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுாலகத்தில் புதிய வகை உறுப்பினர் அறிமுகம் நுாலகத்தில் புதிய வகை உறுப்பினர் அறிமுகம்
நுாலகத்தில் புதிய வகை உறுப்பினர் அறிமுகம்
நுாலகத்தில் புதிய வகை உறுப்பினர் அறிமுகம்
நுாலகத்தில் புதிய வகை உறுப்பினர் அறிமுகம்
ADDED : ஜூன் 13, 2024 06:19 AM
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் புத்தகம் இரவல் பெற தனிநபர், குடும்பம், மூத்த குடிமக்கள், மாணவ மாணவியர் என நான்கு வகை உறுப்பினர்களுடன், நிறுவனங்கள், கல்வி நிறுவன உறுப்பினர் என புதிய வகை உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நுாலகத்தின் பயன்பாடு அனைத்துப் பிரிவினரையும் சென்றடையும் வகையில், மதுரை மாவட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அவர்களது பள்ளி, கல்லுாரியிலேயே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், தனியார், அரசு அலுவலக ஊழியர்களின் நுாலகப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி அரசுப் பள்ளி, கல்லுாரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் முதல்முறை உறுப்பினர் கட்டணம், ஆண்டு சந்தா இலவசம். தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கும், தனியார் அலுவலகங்களுக்கும் முதல்முறை உறுப்பினர் கட்டணம் ரூ.1500, ஆண்டு சந்தா ரூ.500. இவ்விருவகையிலும் தலா 25 புத்தகங்கள் வரை இரவல் பெறலாம்.
கல்வி நிறுவனங்களுக்கான உறுப்பினர் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வரும், நிறுவனங்களுக்கான உறுப்பினர் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தலைமை பொறுப்பு அலுவலரும், இரவல் பெறப்படும் புத்தகங்களுக்கு முழு பொறுப்பாவர். புத்தகம் இரவல் பெற, கல்வி நிறுவனம் அல்லது அலுவலகம் தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து கடிதம் வழங்க வேண்டும். அவரால் மட்டுமே அக்கடிதம், குறிப்பிட்ட உறுப்பினர் அட்டை மூலம் புத்தகங்களை இரவல் பெற முடியும்.