ADDED : ஜூன் 02, 2024 03:55 AM
மதுரை: விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் துவங்கியது.
கலெக்டர்கள் சங்கீதா (மதுரை), ஜெயசீலன் (விருதுநகர்) துவக்கி வைத்தனர். விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி பங்கேற்றார். ஜூன் 15 வரை கண்காட்சி நடைபெறும்.