ADDED : ஜூன் 15, 2024 06:28 AM
திருமங்கலம் : கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. திருமங்கலத்தில் பள்ளிகள் துவங்கும், முடியும் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டி.எஸ்.பி., அருள் உத்தரவில் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, எஸ்.ஐ., ஜெயக்குமார் தலைமையில் அனைத்து பள்ளிகளின் வாயிலிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் காலை, மாலையில் போலீசார் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.