/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ராஜ்யத்திற்கு பதில் பூஜ்யம்தான் கிடைத்தது; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல் ராஜ்யத்திற்கு பதில் பூஜ்யம்தான் கிடைத்தது; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்
ராஜ்யத்திற்கு பதில் பூஜ்யம்தான் கிடைத்தது; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்
ராஜ்யத்திற்கு பதில் பூஜ்யம்தான் கிடைத்தது; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்
ராஜ்யத்திற்கு பதில் பூஜ்யம்தான் கிடைத்தது; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்
ADDED : ஜூலை 27, 2024 06:38 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் போதைப் பொருள் கடத்தல், முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட பாசறை துணை செயலாளர் மணிமாறன் முன்னிலை வைத்தார். துண்டு பிரசுரங்களை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் வழங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், கருப்பையா, ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கணேசன், பேரூர் செயலாளர்கள் அசோக்குமார், மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் திருப்பதி, நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், சிவசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு, கள்ளச்சாராய இறப்பு உயர்ந்து வருகிறது. போலீசாரை சுதந்திரமாக செயல்பட வைத்தால் இந்நிலை வந்திருக்காது. முதல்வர் கல்வராயன் மலைக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். இல்லை என்றால் உதயநிதியை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதன் மூலம் அரசு முடங்கி உள்ளது தெரிகிறது. தமிழகத்தில் தி.மு.க.,தான் ஆளுங்கட்சியாக உள்ளது. பார்லிமென்டில் தமிழக உரிமைக்காக, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உரிமையை பெற்றுத்தர மக்கள் ஓட்டளித்தனர். ஆனால் 39 தி.மு.க., கூட்டணி எம்.பி.க்கள் எதுவும் செய்யவில்லை.
அவர்கள் தங்கள் குரல் எழுப்பி தமிழகத்திற்கு நிதியை பெற்றுத்தர வேண்டாமா. அத்தனை எம்.பி.,க்கள் மூலமும் ராஜ்யம் கிடைக்கும் என்று நினைத்த மக்களுக்கு பூஜ்யம் தான் கிடைத்துள்ளது என்றார்.