ADDED : ஜூன் 26, 2024 07:06 AM
மதுரை : சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு மதுரை பெசன்ட்ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் கோபி மீனாட்சி சுந்தரம் சிறப்பு பூஜைகள் செய்தார். கண்காணிப்பாளர் சந்திரசேகரன், கிருஷ்ணராஜன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.