வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கல்
வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கல்
வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கல்
ADDED : ஜூலை 28, 2024 05:02 AM

மதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு போலீசார், அப்துல்கலாம் முதலுதவி நல அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போக்குவரத்து விதிகளை பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை தல்லாகுளம் உதவிகமிஷனர் இளமாறன், திலகர்திடல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி, எஸ்.ஐ.,க்கள் சந்தனகுமார், லிங்ஸ்டன், நந்தகோபால், சமூக ஆர்வலர்கள் முபீன், சக்திமுருகன் உள்ளிட்டோர் வழங்கினர்.