/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஏழு ஊருணிகளையும்பட்டா போட்டு விற்றுவிட்டனர்: தாசில்தாரரிடம் விவசாயிகள் குமுறல் ஏழு ஊருணிகளையும்பட்டா போட்டு விற்றுவிட்டனர்: தாசில்தாரரிடம் விவசாயிகள் குமுறல்
ஏழு ஊருணிகளையும்பட்டா போட்டு விற்றுவிட்டனர்: தாசில்தாரரிடம் விவசாயிகள் குமுறல்
ஏழு ஊருணிகளையும்பட்டா போட்டு விற்றுவிட்டனர்: தாசில்தாரரிடம் விவசாயிகள் குமுறல்
ஏழு ஊருணிகளையும்பட்டா போட்டு விற்றுவிட்டனர்: தாசில்தாரரிடம் விவசாயிகள் குமுறல்
ADDED : ஜூலை 26, 2024 06:29 AM
திருப்பரங்குன்றம் : ''தனக்கன்குளத்தில் இருந்த ஏழு ஊருணிகளையும் பட்டா போட்டு விற்றுவிட்டதாக'' திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இக்கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் சிவராமன், மகேந்திரன், பேயத்தேவர், ரமேஷ், கிழவன்சாமி பேசியதாவது: கண்மாய்கள், நீர் வரத்து கால்வாய்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் மானாவாரி கண்மாய்களுக்கு தண்ணீர் வராது. தண்ணீர் இல்லையென்றால் எப்படி விவசாயம் செய்வது. விவசாயம் இல்லையென்றால் மக்கள் எப்படி சாப்பிடுவார்கள். திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களை அளந்து எல்லை கற்கள் ஊன்றி பாதுகாக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு வெளியேறும் தண்ணீர் செல்லும் பாசன வாய்க்கால்கள் முழுவதிலும் குப்பை கொட்டப்படுகிறது. கழிவுநீரும் விடப்படுகிறது. விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்படுகிறோம். தென்கால் கண்மாய் கரையில் ரோடு அமைக்கும் பணிக்காக 3வது மடையை சேதப்படுத்தி விட்டனர். கடந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யவில்லை. இந்தாண்டும் இயலாது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. தனக்கன்குளத்தில் இருந்த ஏழு ஊருணிகளையும் பட்டா போட்டு விற்றுவிட்டனர். 150 அடி ஆழம் இருந்த பெரிய பாறை பகுதியை மேடாக்கி ஆக்கிரமித்து விட்டனர். நிலையூர் பெரிய கண்மாய் முதல்மடை வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் பூச்சி மாத்திரை, சத்து மாத்திரை தட்டுப்பாடாக உள்ளது என்றனர்.