Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்

முகூர்த்த நாட்களில் திணறும் திருப்பரங்குன்றம்

ADDED : ஜூன் 13, 2024 06:27 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முகூர்த்த நாட்களில்ஏராளமான மணவிழா நிகழ்ச்சிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

திருப்பரங்குன்றத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. முகூர்த்த நாட்களில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறைந்தபட்சம் 50க்கும் மேற்பட்ட பதிவு திருமணங்களும், 30க்கும் மேற்பட்ட பரிகாரதிருமணம், பதிவில்லா திருமணங்கள் நடக்கிறது. இவைதவிர மண்டபங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன.

திருப்பரங்குன்றத்தில் சரவணப்பொய்கை செல்லும் வழியிலும், ஜி.எஸ்.டி., மெயின் ரோடு தெப்பக்குளத்திலும் வாகன காப்பகங்கள் உள்ளன. பெரும்பாலும் திருமணத்திற்கு வரும் வாகனங்களை அங்கு நிறுத்துவதை தவிர்த்து ரத வீதிகளில் நிறுத்துகின்றனர்.

நகரில் உள்ள இரண்டு மேம்பாலங்களுக்கு இடையிலுள்ள திருமண மண்டபங்களுக்கு வருவோர் குறுகலான ஜி.எஸ்.டி. ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

அதேநேரம் திருநகர், திருமங்கலத்தில் இருந்து வரும் அனைத்து டவுன் பஸ்களும் ஜி.எஸ்.டி., ரோட்டின் வழியாக சென்று திரும்புகின்றன.இதனால் பொதுமக்கள், டூவீலரில் செல்வோர் சிரமம் அடைகின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது.

திருமண நாட்களில் கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், ரத வீதிகள், ஜி.எஸ்.டி., ரோட்டில் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து, வாகன காப்பகங்களை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us