ADDED : ஜூன் 20, 2024 04:57 AM
கோயில்
17ம் ஆண்டு வருஷாபிஷேகம் - யாகசாலை: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மகா யாகசாலை, அதிகாலை 4:30 மணி, வடக்கத்தி அம்மன் பூஜை, மாலை 6:00 மணி, ஆற்றுக்கு சென்று சக்திகுடம் எடுத்தல், இரவு 7:15 மணி.
-ஆனிமாத திருவிழா புரவி எடுப்பு திருவிழா: நெவுலி அய்யனார் கோயில், ஏ.கோயில்பட்டி, மாலை 4:00 மணி.
மாதாந்திர அனுஷ விழா, மஹா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், மாலை 5:00 மணி, இந்திரா செளந்தர்ராஜன் சொற்பொழிவு, மாலை 6:30 மணி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.
அனுஷ வைபவத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப்பாதுகைக்கு அபிஷேகம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாளை உனதே: நிகழ்த்துபவர் - பேராசிரியர் ராஜாராம், விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, அகத்தர உறுதி மையம், மாலை 6:30 மணி.
பொது
இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், ஏற்பாடு: ஸம்ஸ்க்ருத பாரதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை.
மருத்துவம்
தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
ரத்தசோகை விழிப்புணர்வு, பெண் மாணவிகளுக்கான ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிதல் முகாம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி மகளிர் நலக்குழு, மதுரை ரோட்டரி கிளப், லைப் கேர் டயக்னோஸிஸ், காலை 10:30 மணி.
கண்காட்சி
அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.