/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம் ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்
ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்
ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்
ஆளுங்கட்சியை வசைபாடாமல் அ.தி.மு.க., பற்றி குறைகூறுவதா அண்ணாமலைக்கு உதயகுமார் கண்டனம்
ADDED : ஜூன் 01, 2024 04:55 AM
பேரையூர்: 'தமிழகத்தில் காய்கறிகளை அள்ளி வாங்கிய நிலை மாறி எண்ணி வாங்கும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளது' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
பேரையூர் தாலுகா டி.குன்னத்துார் அம்மா கோயிலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
இதில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் காய்கறிகளை அள்ளி வாங்கிய நிலை மாறி எண்ணி வாங்கும் அளவு விலைவாசி ஏறி இருக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் அரசு துாங்கிக் கொண்டிருக்கிறது.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆட்சி அதிகாரத்தை வைத்து எல்லோரையும் வசை பாடுவதையே வேலையாக வைத்துள்ளார். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை பட்டியலிட்டால், அது உண்மை என்று நிரூபித்தால்... நீங்கள் அ.தி.மு.க.,வின் இடத்தை பிடிக்க தேவையில்லை... மக்களே அந்த இடத்தை உங்களுக்குத்தர தயாராக இருப்பர்.
அதை விடுத்து, ஆளும் கட்சியை வசைபாடாமல், ஆட்சியில் இல்லாத அ.தி.மு.க., வை அழிக்க பார்ப்பதும், தொண்டர்களுக்கு மனஉளைச்சல் தருவதுடன், எங்கள் தலைவர்கள் பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவ்வாறு பேசுவதை விட்டு விட்டு தி.மு.க., ஆட்சியின் சீர்கேடை எடுத்துக் கூறுங்கள் என்றார்.