/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வேலம்மாள் மருத்துவமனை இதய சிகிச்சையில் சாதனை வேலம்மாள் மருத்துவமனை இதய சிகிச்சையில் சாதனை
வேலம்மாள் மருத்துவமனை இதய சிகிச்சையில் சாதனை
வேலம்மாள் மருத்துவமனை இதய சிகிச்சையில் சாதனை
வேலம்மாள் மருத்துவமனை இதய சிகிச்சையில் சாதனை
ADDED : ஜூலை 28, 2024 03:59 AM
மதுரை : நான்கு வகை சிக்கலான இதய பிரச்னை இருந்த ஒருவருக்கு ஒரே நேரத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்து சாதனை படைக்கப்பட்டது.
திருப்பாச்சேத்தியை சேர்ந்த 41 வயது ஆண் நெஞ்சுவலி, சளியில் ரத்த பிரச்னைகளுடன் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு வந்தார்.
பெரிய ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு, இதய வால்வில் அடைப்பு வெடிக்கக் கூடிய வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது.
இவ்வகை ஆப்பரேஷனை பல கட்டங்களில் செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்டமும் 6 வாரங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம்.
சிக்கலான தன்மையினால் இக்குறைபாடுகள் அனைத்தையும் ஒரே முயற்சியில் சரி செய்ய உலகளவில் மிகக் குறைவான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டாக்டர் ராம்பிரசாத் தலைமையிலான மருத்துவக்குழு பல ஆப்பரேஷன்களை ஒரே நேரத்தில் செய்தது. இச்சிகிச்சை உலகில் சில மட்டுமே பதிவாகியுள்ளது.
ராம்பிரசாத் கூறியதாவது: இந்த இதய பிரச்னை அரிதானது. உலகளவில் பல அறுவை சிகிச்சை நிபுணர்களால் ஒரே கட்டத்தில் செய்ய முயற்சிக்கப்படவில்லை.
இந்நோயாளியின் இதய வால்வில் பிரச்னைகள் இருந்தன. அயோர்டாவில் வீக்கம், கீழே செல்லும் பெருநாடியில் சுருக்கம் இருந்தது. கரோனரி தமனி நோயும் இருந்தது.
இந்த ஆப்பரேஷன் அனைத்தும் வெறும் 35 சதவீதம் செயல்பாட்டில் இருக்கும் இதயத்தில் செய்யப்படவேண்டும். 12 மணி நேரம் ஆப்பரேஷன் செய்தோம். இது இம்மருத்துவமனை இதய அறுவைச் சிகிச்சை பிரிவின் ஒரு மைல்கல் சாதனை என்றார்.