/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஸ்டாலின் அணுகுமுறைக்கு வெற்றி: திருமாவளவன் ஸ்டாலின் அணுகுமுறைக்கு வெற்றி: திருமாவளவன்
ஸ்டாலின் அணுகுமுறைக்கு வெற்றி: திருமாவளவன்
ஸ்டாலின் அணுகுமுறைக்கு வெற்றி: திருமாவளவன்
ஸ்டாலின் அணுகுமுறைக்கு வெற்றி: திருமாவளவன்
ADDED : ஜூன் 16, 2024 05:14 AM
கோவை: கோவையில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தைத் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் எந்தக் கூட்டணிக்கும் 100 சதவீதம் வெற்றி கிடைக்கவில்லை.
கேரளாவில் கூட ஒரு தொகுதியில் நடிகரை வைத்து பா.ஜ., வென்றிருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவையும், பவன் கல்யாண் என்ற நடிகரையும் வளைத்துப் போட்டு மூன்று இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள். கர்நாடகாவில் சில இடங்களைப் பறி கொடுத்தாலும், சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; தெலங்கானா, மஹாராஷ்டிராவிலும் கூட சில தொகுதிகளை வென்றிருக்கிறார்கள்.
ஆனால் தென் மாநிலங்களில் அவர்களால் கால் பதிக்க முடியாத ஒரே மாநிலம் தமிழகம் தான்; எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், இந்த மண்ணில் வேரூன்ற முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் காட்டியுள்ளார் ஸ்டாலின்.
'இண்டியா' கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, நம்முடைய வெற்றியை வியந்து பார்க்கிறார்கள்.
நாடு முழுதும் பயணம் செய்து, பல்வேறு தலைவர்களையும் சந்தித்து இந்த அணிக்குக் கொண்டு வந்தார் ஸ்டாலின். அவருடைய அணுகு முறைக்கு கிடைத்ததே இந்த வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன், மா.கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் விழாவில் பேசினர்.