/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிங்கிள் டீ குடித்து விட்டுகூட பணி செய்பவர் தி.மு.க., தொண்டர்: உதயநிதி பெருமிதம் சிங்கிள் டீ குடித்து விட்டுகூட பணி செய்பவர் தி.மு.க., தொண்டர்: உதயநிதி பெருமிதம்
சிங்கிள் டீ குடித்து விட்டுகூட பணி செய்பவர் தி.மு.க., தொண்டர்: உதயநிதி பெருமிதம்
சிங்கிள் டீ குடித்து விட்டுகூட பணி செய்பவர் தி.மு.க., தொண்டர்: உதயநிதி பெருமிதம்
சிங்கிள் டீ குடித்து விட்டுகூட பணி செய்பவர் தி.மு.க., தொண்டர்: உதயநிதி பெருமிதம்
ADDED : செப் 25, 2025 03:25 AM
பேரையூர் : பேரையூர் தாலுகா முத்தப்பன்பட்டி சேடப்பட்டி முத்தையா நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்தினார். தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மணிமாறன், அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு, எம்.பி., தங்கத்தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டிமுருகன் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதில் உதயநிதி பேசியதாவது. தி.மு.க., தலைவராக பொறுப்பேற்று கொண்டபின் தேர்தலில் ஸ்டாலின் தோல்வியை சந்தித்தது கிடையாது. உங்களின் ஆதரவுடன் தான் இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக விளங்குகிறார். கடந்த தேர்தல் அறிக்கைகளில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். அ.தி.மு.க., பா.ஜ., துரோக கூட்டணி.
இதை வீழ்த்த முடியும். ஆறு மாதம் ஒவ்வொரு தொண்டரும் முழுமூச்சுடன் உழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர்களையும் விட்டுவிடாமல் சந்தித்து பணியாற்ற வேண்டும்.
சிங்கிள் டீ குடித்து விட்டு கூட பணி செய்பவர்கள் தி.மு.க., தொண்டர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.