Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ADDED : பிப் 01, 2024 04:34 AM


Google News
வீடுகளுக்கு முன் கழிவுநீர்

மதுரை முனிச்சலை இஸ்மாயில்புரம் 11வது தெருவில் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதியில் சாக்கடைநீர் செல்கிறது. இதில் குப்பையைக் கொட்டுகின்றனர். இதனால் தொற்று நோய் அபாயத்தில் உள்ளோம். -

-பாஸ்கர், இஸ்மாயில்புரம்

கழிப்பிட வசதி தேவை

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய கழிப்பறை, உடைமாற்றும் அறை வசதி இல்லை. இதனால் பக்கதர்கள் அவதிப் படுகின்றனர். கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாரிமுத்து, ராமேஸ்வரம்

பாதசாரிகள் அவதி

மதுரை கீழவாசல் காமராஜர் சிலை அருகே உள்ள பகுதியில் பிளாட்பாரங்களில் மூடைகளை அடுக்கி வைத்திருப்பதால் பாதசாரிகள் செல்ல முடியவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேஷ்பாபு, கீழவாசல்

தெருவிளக்கு எரியவில்லை

மதுரை மாநகராட்சி 71வது வார்டு பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோடு, வாகேஸ்வரி 2வது தெருவில் விளக்குகள் எரியவில்லை. ரோடு மேடும் பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவான நடவடிக்கை தேவை.

-ரவிக்குமார், பொன்மேனி

புதிய சாலையில் பள்ளம்

மதுரை டி.வி.எஸ்., நகர் சத்யசாய் நகர் பகுதியில் புதிய ரோடு அமைத்த சில மாதங்களிலே பள்ளம் உருவாகிவிட்டது. மாநகராட்சியினர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

-ஸ்ரீநிவாசன், சத்யசாய் நகர்

நிழற்குடை தேவை

மதுரை கூடல்நகர் வானொலி நிலைய பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைத்துதர வேண்டும். பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பயணிகள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர்.

- குணசீலன், கூடல்நகர்

தொற்று நோய் அபாயம்

மதுரை மாநகராட்சி 75வது வார்டு ஜெய்ஹிந்துபுரம் மார்கெட் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மார்கெட்டுக்கு செல்ல முடியவில்லை. சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை தேவை.

-மோகன், சத்யசாய் நகர்

தனி வழித்தடம் தேவை

மதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் ரயில்களை ஒரே வழித்தடத்தில் நிறுத்தி வைப்பதால் பயணிகள் குழப்பமடையும் நிலை உள்ளது. ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சபா, சிம்மக்கல்

நெட்வெர்க் தடையால் அவதி

மதுரை தலைமை தபால் அலுவலகத்தில் அடிக்கடி நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

-சங்கர்ராம், பைக்காரா, மதுரை

பள்ளங்களால் விபத்து

மதுரை தெற்குவெளி வீதியில் பெட்ரோல் பங்க் அருகே ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அடிக்கடி விபத்து நடந்து விடுகிறது. பள்ளங்களை மூட வேண்டும்.

- ராமநாதன், மதுரை

டூவீலர்களால் தொல்லை

மதுரை தெற்கு கோபுரம் எதிரே சொக்கப்பநாயக்கர் தெருவில் டூவீலர்களை நிறுத்தி செல்வதால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் நெரிசலால் முகம் சுளிக்கின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மாரிமுத்து, தெற்குவாசல்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us