Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ADDED : பிப் 02, 2024 06:16 AM


Google News
Latest Tamil News
* கால்வாய் குப்பையை அகற்ற வேண்டும்

மதுரை மாநகராட்சி 22 வது வார்டு செங்கோல் நகர் கால்வாய்யில் பல மாதங்களாக குப்பை, புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பாம்பு வசிப்பிடமாக உள்ளது. குப்பையை அகற்ற வேண்டும்.

- வாசுகி மேரி, செங்கோல் நகர்.

*அறிவிப்பு பலகை மாற்றவேண்டும்

மதுரை மாநகராட்சி 44 வது வார்டு புதுராமநாதபுரம் ரோட்டில் உள்ள மாநகராட்சி அறிவிப்பு பலகையில்மீனாட்சி நகர் என்பதற்கு பதிலாக மீனாட்சி தெரு என்று உள்ளது. உடனே சரி செய்ய வேண்டும்.

- வேலுச்சாமி, புதுராமநாதபுரம் ரோடு.

* வாய்க்காலில் கழிவுநீர்

திருமங்கலம் நகரில் காமாட்சி அம்மன் கோயில் தெரு முழுவதும் பாதாள சாக்கடை நிறைந்து வாய்காலில் ஓடுகிறது. இதனால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

- கே. ராஜா, திருமங்கலம்.

*கொசுக்களால் தொல்லை

மதுரை பழைய குயவர்பாளையம் ரோடு காசிமல்லி தோப்பு தெருவில் வாய்க்கால் முழுவதும் சாக்கடை ஓடுகிறது. குப்பை முறையாக அள்ளப்படுவது இல்லை, கொசுகள் உற்பத்தியாகின்றன.

- இந்துமதி, பழைய குயவர்பாளையம் ரோடு.

* அகல பாதை வேண்டும்

மதுரை ஒபுளா படித்துறை முதல் ஏ.வி பாலம் வரையிலான வைகை தென்கரை ரோட்டில் பாதை சிறியதாக உள்ளதால் பெரிய வாகனங்கள் வரும்போது டூவீலரில் செல்ல முடியவில்லை. அகலப்பாதையாக மாற்ற வேண்டும்.

- தங்கம் செந்தில்குமார், மதிச்சியம்.

* ரோடு ஆக்கிரமிப்பு

மதுரை பெத்தானியபுரம் பாலம் முதல் ரிங்ரோடு வரையிலான வைகை தென்கரை, வடகரை ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கணேஷ், தத்தனேரி.

* நுாலகத்தில் மின்சாரம் இல்லை

மேலவளவு நுாலகத்தில் ஓராண்டாக மின்சாரம் இல்லை. நுாலகத்தில் கழிப்பறை வசதி இல்லை. தேர்வு நெருங்கும் நேரம் மாணவர்கள் மிகவும் சிரம்மப்படுகிறார்கள்.

- செல்வம், மேலவளவு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us