/உள்ளூர் செய்திகள்/மதுரை/சாக்கடை குளமாக மாறிய ரயில்வே அண்டர் பாஸ் பாலம்சாக்கடை குளமாக மாறிய ரயில்வே அண்டர் பாஸ் பாலம்
சாக்கடை குளமாக மாறிய ரயில்வே அண்டர் பாஸ் பாலம்
சாக்கடை குளமாக மாறிய ரயில்வே அண்டர் பாஸ் பாலம்
சாக்கடை குளமாக மாறிய ரயில்வே அண்டர் பாஸ் பாலம்
ADDED : பிப் 02, 2024 06:14 AM

திருமங்கலம்: திருமங்கலம் வடகரை செல்லும் ரோட்டில் திட்டமிடுதலின்றி கட்டப்பட்ட ரயில்வே அண்டர் பாஸ் பாலம் எப்போது சாக்கடை குளமாக காட்சியளிக்கிறது.
திருமங்கலம் விருதுநகர் ரயில் பாதையில் தண்டவாளத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே அண்டர் பாஸ் பாலம் கட்டப்பட்டது. ஆனால் முறையான திட்டமிடுதல் இன்றி கட்டப்பட்டதால் பாலத்தின் கீழ் சாக்கடை கழிவுநீர் தேங்குவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு இருந்த போதும் அதை முழுமையாக இயக்காமல் இருப்பதால் எப்போதும் 3 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.
மழைக்காலங்களில் தண்ணீரின் அளவு கூடும். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சிறிய ரக வாகனங்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் சாக்கடை கழிவு நீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்றுக்கும் ஆளாகின்றனர். தற்போது மழைக்காலம் முடிந்து விட்ட நிலையிலும் பாலத்தின் அடியில் இரண்டு அடிவரை தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் திருமங்கலம் விமான நிலைய ரோடு ரயில்வே கிராசிங் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. விரைவில் பாலம் பணிகள் தொடங்கப்பட்டால் விமான நிலைய பாதையில் போக்குவரத்து பாதிக்கப்படும்.
அப்போது இந்த பகுதியில் உள்ள வாகனங்கள் கடந்து செல்வதற்கு உரிய பாதை வசதி இல்லாத நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அண்டர் பாஸ் பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும்.


