ADDED : ஜூன் 20, 2025 03:30 AM
சோழவந்தான்: செல்லம்பட்டி ஒன்றியம் நரியம்பட்டியில் இதுவரை சாக்கடையே கட்டப்படவில்லை.
அப்பகுதியைச் சேர்ந்த பூங்கொடி கூறியதாவது: எங்கள் பகுதியில் பயன்படுத்தும் கழிவு நீர் வீட்டின் முன் உள்ள குழியில் தேங்கி தெருக்களில் செல்லும். இதனால் துர்நாற்றம், நோய்தொற்று அபாயம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை என்றார்.