ADDED : அக் 09, 2025 04:00 AM

மதுரை : மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான பள்ளி மாணவர்களுக்கான சிலம்பப் போட்டி சென்னையில் நடந்தது.
இதில் தொடுமுறைப் பிரிவு போட்டியில் மதுரை தென்னவர் சிலம்பப் பள்ளி மாணவர் கவின் சூரியவரதன் முதலிடம் பெற்று ரூ.ஒரு லட்சம் பரிசுத்தொகை வென்றார். தென்னவர் அணித்தலைவர் லில்லி கிரேஸ் பாராட்டினார்.


