ADDED : மார் 21, 2025 04:15 AM
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டியில் கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கூடுதல் கலெக்டர் மோனிகா ரானா ஆய்வு செய்தார்.
சமூக ஆர்வலர் சரவணன் தலைமையில் மக்கள் புதிதாக கட்டப்படும் அலுவலகத்திற்கு தகவல் பலகை வைக்கவில்லை. 3 மாதங்களுக்கு முன் வலைசேரிபட்டி ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கனவே தங்களிடம் மனு கொடுத்தும் இதுவரை அகற்றவில்லை என்றனர். இது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என கூடுதல் கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் ஜெயபாலன், சங்கர் கைலாசம் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.