/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அஜித்குமார் மரண விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம் அஜித்குமார் மரண விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
அஜித்குமார் மரண விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
அஜித்குமார் மரண விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
அஜித்குமார் மரண விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்
ADDED : செப் 24, 2025 08:31 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கின் விசாரணையை மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மடப்புரம் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதுதொடர்பாக கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி அறிக்கையை மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் ஆக.20 ல் சி.பி.ஐ.,தாக்கல் செய்தது. இதில் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை சரி செய்து மீண்டும் சி.பி.ஐ.,தாக்கல் செய்தது.
வழக்கில் கைதான போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், வழக்கில் சேர்க்கப்பட்ட டிரைவர் ராமச்சந்திரனுக்கு செப்.20 ல் இறுதி அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது. நேற்று நீதிபதி செல்வபாண்டி விசாரித்தார். போலீஸ்காரர்கள் 5 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். டிரைவர் ராமச்சந்திரன் ஆஜரானார்.
விசாரணையை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி அக்.6 க்கு நீதிபதி ஒத்திவைத்தார். அடுத்தகட்டமாக முதன்மை மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்கலாம் அல்லது உரிய வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது.