/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகளை கடத்தியவரை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயற்சி மகளை கடத்தியவரை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயற்சி
மகளை கடத்தியவரை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயற்சி
மகளை கடத்தியவரை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயற்சி
மகளை கடத்தியவரை கைது செய்யக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 24, 2025 01:44 AM
ஓசூர், ஜ
ஓசூரில், மகளை கடத்தியவரை கைது செய்யக்கோரி, போலீஸ் ஸ்டேஷன் முன் தந்தை தீக்குளிக்க முயன்றார்.
ஓசூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 19ம் தேதி சிறுமி மாயமான நிலையில், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் அவரது தந்தை புகார் செய்தார். மாயம் என வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்த போது, பெருமாள்பள்ளியை சேர்ந்த கஜேந்திரன், 25, என்பவர் சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு சிறுமி மீட்கப்பட்டு, விடுதியில் தங்க வைக்கப்பட்டார். நேற்று காலை பெற்றோருடன் செல்ல மறுத்ததால், குழந்தைகள் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மகளை தன்னுடன் அனுப்பி வைக்காததால், ஓசூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை வந்த, 40 வயதுள்ள சிறுமியின் தந்தை, தன் மகளை கடத்தியவரை கைது செய்யக்கூறி, போலீசாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போலீசார், அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். தரையில் உருண்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்த சிறுமியின் தந்தையிடம், பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், போக்சோ வழக்கமாக மாற்றியுள்ளதாகவும், விரைவில் கஜேந்திரனை கைது செய்வதாகவும் உறுதியளித்தனர். அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.