மதுரை: காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதந்திர நட்சத்திர உத்ஸவம் நடந்தது.
விக்ரகத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீ குமார், பரத்வாஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.